| கலைஞரின் கவிதைத் தமிழ், பாரதியார், பாரதிதாசன் போன்ற மாபெரும் கவிஞர்களனை; தாக்கம் எல்லாம் சேர்ந்து என்னைப் பத்து வயதில் கவிதை எழுதத் தூண்டின. இதுதான் என்னுடைய இலக்கியப் பின்னணி. மற்றபடி தமிழ்நாட்டு இளைஞர்களலை; தொண்ணூறு பேருக்கு வாய்க்கக்கூடிய வழக்கமான நடுத்தர குடும்பத்து வாழக்கை, வழக்கமான வருமை, வழக்கமான தோல்விகள், வழக்கமான அவமானங்கள், வழக்கமான தன்னமபிக்கை இவ்வளவும் எனக்கும் வாய்த்திருந்தன. இளமைப் பருவம் என்று நான் சிறப்பாகச் சொல்லிக்கொள்ள விரும்புவது ஒன்றே ஒன்று. சின்ன வயதிலேயே எனக்கு ஒரே ஒரு நம்பிக்கை மட்டும் இருந்தது. நீ மொழிக்கு தொண்டு செய்யப் பிறந்தவன். மொழி உனக்கு வசப்படும். மொழி உன்னை எங்கு அழைத்துப் போகிறதோ அதன் பின்னால் போ என்று மட்டும் என் காதுக்கு தெரியாத ஒரு குரல் என்னோடு பேசிக்கொண்டிருந்ததாக நான் உணர்ந்தேன். இதுதான் இளமைக் காலத்தில் நான் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறப்புச் செய்திகள்.• உங்கள் வீட்டிலோ அல்லது உங்கள் கிராமத்தில் இருப்பவர்களோ உங்களை ஊக்குவித்தார்களா?இல்லை. கவிதையை யாருமே ஊக்குவிக்க மாட்டார்கள். தொடக்கத்தில் கவிதை என்பது வயிற்றுக்கு உதவாத விஷயம் என்பது சமுகத்தில் ஒரு பெரிய கருத்து. எழுத்தாளனாக இருக்கிறவன், ஓவியனாக இருக்கிறவன், சிறப்பியாக இருக்கிறவன், அல்லது நுண்கலைகளலை; ஈடுபடுகிறவன் எவனுமே வாழ்க்கையில் பொருளாதாரத்தில் வெற்றி பெறமாட்டான் என்று கண்ணுக்குத் தெரிந்த முன்னுதாரணங்கள் முன்னமே இருந்ததனால் அந்தத் துறையில் யாரையும் ஆற்றுப்படுத்தவோ, ஊக்குவிக்கவோ மாட்டார்கள். சம்பந்தப்பட்ட கலைஞருக்கு மட்டும்தான் அந்த கலையில் ஈடுபாடு இருக்குமே தவிற அவனைச் சுற்றியுள்ள சமூகம் அவனை உற்சாகப் படுத்தாது.
• உங்கள் இன்டிரஸ்ட்டை நீங்கள் எப்படி சஸ்டைன் பண்ணினீங்க? அந்த ஆர்வத்தை நான் கட்டிக் காப்பாற்றிக் கொண்டதே என் மீது எனக்கிறுந்த தன்னம்பிக்கையின் காரணமாக.
• நீங்க எழுதின முதல் கவிதை, பிரசுரமான முதல் கவிதை?என்னுடைய முதல் கவிதையின் முகமும் தெரியவில்லை, அகமும் தெரியவில்லை. அது வயல்வெளகைளiலே பிரசவிக்கப்பட்டு வயல்வெளகைளiலேயே வளர்ந்து வயல்வெளகைளiலேயே மரித்துப் போயிருக்கக் கூடும். முதலில் பிரசுரமான கவிதை நான் பச்சையப்பன் கல்லுஷரியில் படித்துக் கொண்டிருந்தபோது, மாணவர்கள் தேன்மழை என்று ஒரு இதழ் நடத்திக் கொண்டிருந்தார்கள். அந்த இதழினுடைய ஆசிரியர் என்னுடைய வகுப்பறைக்கு என்னைத் தேடி வந்து, நீங்கள் கவிதை எழுதுவீர்களாமே, ஒரு கவிதை கொடுங்களேன் என்று வாங்கி பிரசுரித்தார். அது 20 வயதில் பிரசுரமானது. இள நெஞ்சின் ஏக்கம் என்று ஒரு கவிதை 1970தில் பிரசுரமான விருத்தம்.
• கவிதை எழுத உங்கள் இன்ஸ்பிரேஷன்? நான் முன்னுரையில் சொன்ன அத்தனை பேரும் வந்து என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று சொல்லலாம். ஒரு விதை முளைப்பதற்குக் கூட நான்குக் காரணங்கள், தேவைப்படுகின்றன, வெப்பம், ஈரம், காற்று, மண். ஒரு சிறு விதையினுடைய உள் உயிரை வெளகை; கொணர்வதற்கு நான்கு காரணங்கள் தேவைப்படுகின்றன என்றால் உள்ளiருக்கும் கவிதா ஜோதியை ஊற்றி ஊற்றி வளர்ப்பதற்கு எத்தனைச் சக்திகள் தேவைப்பட்கடிருக்கும். எனவே, என்னுடைய முன்னோடிகளலை; பெரும்பாலோர், சொன்ன உயர்ந்த விஷயங்களளையெல்லாம் நான் உள்ளத்தில் வாங்கி ஊறப்போட்டிருக்கிறேன். இதில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு.
• இந்தக் கேள்வியை பின்னால் கேட்க வேண்டும் என்று இருந்தேன். ஆனால் இப்போதே கேட்க வேண்டியதாகிவிட்டது. உங்களுடைய கவிதைகளலை; நிறைய சைன்டிஃபிக் ஃபாக்ட்ஸ் இருக்கிறது (உதாரணம்) தண்ணீர் தேசம். இதற்கு முந்தைய காலத்துக் கவிதைகளலை; அப்படி இல்லை. ஏன் இப்படி?அதாவது கவிதை என்பது காலத்தினுடைய வார்ப்பு. சங்க இலக்கிய புலவனுக்கு விஞ்ஞானம் சொல்ல வாய்ப்பில்லை. அவனுக்கு இயற்க்கையபற்றிப் பாடுவதற்கு மட்டுமே வாய்ப்பிருந்தது. கம்பனுக்கு பக்தியை தவிர இன்னொன்றை பாட வாய்ப்பில்லை. பக்தி தான் அந்தக் காலத்தில் கருவாக இருந்தது. பாரதியாருக்கு விடுதலை வேட்கைதான் பாடுவதற்கு பாடு பொருளாக இருந்தது. காரணம், அந்த காலக் கட்டத்தினுடைய வார்ப்பாக அவர் கவிதைப் பிறந்தது. சங்க இலக்கியத்திற்கு பிறகு, கம்பனுக்கு பிறகு, பாரதிக்கு பிறகு, பாரதிதாசனுக்கு பிறகு, தமிழை மட்டும் உயர்த்திப் பிடித்த ஒரு இயக்கத்தினுடைய உச்சத்கதிற்கு பிறகு, நிகழ்காலம், கல்வி யுகமாக, அறிவியல் யுகமாக, அறிவு யுகமாக தோன்றியிருக்கிற போது, இந்த நூற்றாண்டில் பிறக்கிற ஒரு கவிஞனும், இந்த முன்னுறையை நிராகரித்து விட்டு போய்விடமுடியாது. எனவே இது விஞ்ஞானத்தின் காலம். எனவே இந்த விஞ்ஞான காலத்தில் இருக்கிற கவிஞர்களுடைய குரல் விஞ்ஞானக் குரலாக ஓலிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. வெற்றிடத்தை காற்று நிரப்பும் என்றுச் சொல்வார்கள். நான் பக்கத்துக் காற்றாக இருந்து அதை நிரப்புவதற்கு முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
• இது நீங்கள் இன்டெர்நெட்டுக்காக நடத்தப்படும் பத்திரிக்கைக்கு கொடுக்கிற முதல் பேட்டின்னு நினைக்கிறேன். சமீபத்தில் தினமணிக் கதிரில் எழுதின ஒரு கவிதைல கம்புயூட்டர் மனிஷனை கொஞ்சம் கொஞ்சமா மெஷினாக மாத்திக்கட்டு வர மாதிரி எழுதியிரிந்தீங்க?ஆமாம்.
• அது உண்மை என்று நினைக்கிறீர்களா? பின்னால் அது போல் நிகழும் என்று நினைக்கிறீர்களா?இல்லை. உங்களை போன்ற இஞைர்கள் கவிதையை தப்பாக புரிந்து கொள்ளக்கூடாது. கவிதையை புரிந்து கொள்வதுதான் கவிதைக்கு வெற்றி. ஒரு நல்ல கவிதையினுடைய வெற்றியே அது புரிந்து கொள்ளப்படுதல் தான். உதாரணமாக, செந்தமிழ் நாடெனும் போதினிலே, இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே என்று பாரதியார் எழுதினார். காதில் தேன் வந்து பாய்ந்தால் இனிக்குமா என்றுக் கேட்டுக் கொண்டிருப்பது கவிதைக்குச் செய்கிறத் துரோகம். அப்படித்தான் இந்தக் கவிதையை தப்பாக புரிந்துக் கொண்டிருக்கிறீர்கள்.
அதாவது இயந்திரங்கள் மனிதர்களாக உருவாகிக் கொண்டிருக்கும் போது, மனிதர்கள் இயந்திரங்கள் ஆகிவிடக்கூடாது என்று என் கவலையைத் தான் தெரியப்படுத்தியிக்கிறேன். ஆகிவிடுவார்கள் என்று அழுத்தம் திருத்தமாக அடிகோலிட்டுச் சொல்லவில்லை. ஆகிவிடகூடாது என்று சொல்லியிருந்தேன். ஆனால், நவீன உலகத்தினுடைய வாழ்வியலுக்கு கணிப்பொறியை தவிர்த்துவிட்டு வாழமுடியாது. மின்சாரத்தை தவிர்த்துவிட்டு இன்று எப்படி ஒரு உலகம் வாழ்ந்துவிடமுடியாதோ, அப்படி கணிப்பொறியை தவிர்த்துவிட்டு ஒரு உலகம் வாழ்ந்துவிட முடியாது. எதிர்காலத்கதில் மனிதர்கள் கணிப்பொறியை விட உயர்ந்தப் பணிகளை செய்வதற்காக ஆற்றுப்படுத்தப்கபடுவார்கள். இப்போது சராசரி மனிதர்கள் செய்துக் கொண்டிருக்கிற வேலையை கணிப்பொறிகள் செய்யும்.
• உங்கள் திருமணம் காதல் திருமணம். ஒரு கவிதையிலிருந்து தான் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். ஒரு பாராட்டுக் கடிதம்…அதையெல்லாம் இதுவரை நான்-ல்க விரிவாக எழுதியிருக்கிறேன். அதைத் தேடிப் பிடித்து படித்துக் கொள்ளுங்கள்.
• உங்க திரைப் படப் பாடல்கள்ல உங்களுக்கு ரொம்ப பிடித்த பாடல், நிறைய இருக்கும். ஆனால், அதில்…நூற்றுக்கணக்காக பாடல்கள், இப்ப ஒரு மனிதனை பிடிப்பதைப் பாருங்கள். ஓரு பாடலை பிடிப்பதைப் பாருங்கள். ஒரு மனிதனை எனக்குப் பிடித்திருக்கிறது என்றச் சொன்னால் அவன் பேச்சுப் பிடித்கதிருக்கும். தோற்றம் பிடித்திருக்கும். பண்பாட்டால் சிலர் கவருவார்கள். பழக்க வழக்கத்தால் சிலர் கவருவார்கள். அன்பால் சில பேர் கவருவார்கள். ஆற்றலால் கவருவார்கள். எனக்கு பிடிக்காதவர்கள் கூட என்னைப் பிடிக்க வைத்து விடுவார்கள். அப்படித் தான் ஒவ்வொரு பாட்டுக்கும் ஒரு முகம் இருக்கிறது. வார்த்தைகளால் சில பாட்டு, இசையால் சில பாட்டு, பாடிய முறையால் சில பாட்டு, படப்பிடிப்புச் செய்ப்பட்ட முறையால் ஒரு பாட்டு, கதையில் பொருந்துகிற முறையினால் ஒரு பாட்டு, கதைச் செத்தப் பிறகும் கூட பாடல் வாழுகிற பாங்கினால் ஒரு பாட்டு. இப்படி ஒவ்வொரு துறைக்கும் ஒரு பாட்டு என்று சொல்லலாம். எனவே ஒரு பாட்டு என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. அப்படிக் குறிப்பிட்டுச் சொன்னால் அதுப் பொய்யாகி விடும்.
• இன்றைய பாடல்கள்ல ஆங்கிலக் கலப்பு இருக்குன்னு ஒரு குற்றச்சாட்டு பொதுவா இருக்கு. சில சமயம் எனக்கும் பாடல் புரியமாட்டேன் என்கிறது. இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.இப்ப இந்த பேட்டி எதன் பொருட்டு எடுக்கறீங்க?
இன்டர்நெட்டுக்காக…
நீங்கள் சொல்கிற போது இன்டர்நெட் என்றுச் சொல்கிறீர்கள். தமிழில் இணையம் என்றுச் சொல்லத் தெரியவில்லை, உங்களுக்கு. அல்லதுச் சொல்ல முடியவில்லை, உங்களால். இன்டர்நெட் என்றுச் சொல்கின்ற போது நீங்கள் வேண்டுமென்றே தமிழைப் புறக்கணிக்க வேண்டும் என்ற அர்த்தத்த்கலை; அந்த சொல்லை நீங்கள் பயன்படுத்தவில்லை. இன்டர்நெட் என்பது பழக்கத்தில் உள்ளக் காரணத்தினாலும், உங்களுக்கும் எனக்கும் வந்து மொழுi உறவு வேண்டும் என்பதாலும், ஆளபடுகின்ற சொல் அது. திரைப்படப் பாடல்களலை; என்ன நோக்கம் என்றுக் கேட்டால் தமிழுக்கு விரோதமல்ல ஆங்கிலக் கலப்பு என்பது. ஒரு இரண்டுப் பாத்திரங்கள்பாடிக் கொள்கின்ற போது, கல்லுயரி மாணவர்கள் இரண்டு பேர் பாடிக் கொள்கிறார்கள். அவர்கள் இந்த விஞ்ஞான யுகத்தினுடைய குழந்தைகள், ஆங்கிலத்கதின் பாதிப்பு உள்ளவர்கள். நடைமுறை வார்த்தைகளையிட்டு அவர்கள் தங்கள் காதலைப் பகிர்ந்துக் கொள்வதாக அர்த்தமே தவிர, வேறல்ல.
உதாரணமாக, இருவர் படத்தில் சங்கக் இலக்கியக் காதலர்கள் பாடுகிறபோது நான் சங்க இலக்கியத்தில் எழுதியிருந்தேன். ஆச்சா… அதன் பிறகு முதல் மரியாதையில் நாட்டுப்புறக் காதலர்கள் காதலிக்கிற போது நாட்டுப்புற மொழியில் எழுதியிருந்தேன். சிந்து பைரவியில் இசைக் காதலர்கள் சந்திக்கிறபோது இசை மொழியில் எழுதியிருந்தேன். கல்லுஷரி மாணவர்கள், ஆங்கிலத் தாக்கம் அதிகமுள்ள தலைமுறையைச் சார்ந்தவர்கள், சந்திக்கிறபோது ஆங்கிலக் கலப்பும் தேவைப்படுகிறது. ஏன்? இது சரியா என்றும் சொல்ல மாட்டேன். சரி என்றும் சொல்ல மாட்டேன். ஆனால் பாத்திரத்துடைய மொழியாக, அது இப்போது உலவி வருகிறது. நிலவி வருகிறது என்பதுதான் உண்மை. நாட்டுப்புறப் பாட்டெழுதிய போது ஏன் நாட்டுப்புற வார்த்தைகளைப் பயன்படுத்தினீர்கள் என்று கேட்காத நீங்கள், இசைச்சொல் போட்டபோது ஏன் இசைச்சொல் பயன்படுத்தினீர்கள் என்றுக் கேட்காத நீங்கள், ஆங்கிலத்தை கலக்கிற போது, ஆங்கிலச் சொல் ஏன் போட்டேன் என்றுக் கேட்கிறீர்கள். கேள்வி நியாயமானதுதான். இதைப் புரிந்துகொள்ளப்படுதலில் இருக்கிறது. ஆங்கிலக் கலப்பு என்பது வைரமுத்து வந்த பிறகு வந்ததல்ல. எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து, சிவாஜி காலத்திலிருந்து, வழி வழியாக ஆங்கிலக் கலப்பும், வந்துகொண்டுதான் இருக்கிறது. அப்போது ஆங்கிலத்தினுடைய புழக்கம் குறைவாக இருந்ததினால் ஆங்கிலச் சொற்களும், புழக்கத்தில் குறைவாக இருந்தன. இன்று ஆங்கிலத்தின் புழக்கம் அதிகமாகிவிட்டக் காரணத்தால், இப்போது இணையத்தை இயக்கத் தெரிந்த எந்த ஒரு தமிழ் மகனுக்கும் ஆங்கிலம் தெரிந்தாக வேண்டும்.
ஆங்கிலம் தான் இணைப்பு மொழியாக இருக்கிறது. எனவே ஆங்கிலத்தின் பாதிப்பால் சமுகத்தில் என்ன பாதிப்பு இருக்கிறதோ அது பாத்திரத்தை பாதிக்கும். பாத்திரத்தினுடைய பாதிப்புத்தான் படைப்பினுடைய பாதிப்பு. இன்னொன்று சொல்ல வேண்டும், உங்களுக்கு. ஒரு சமூகம் எப்படி இருக்கவேண்டும் என்பது கவிதை, எப்படியிருக்கிறது என்பது, திரைப்படப் பாட்டு ஆங்கிலக் கலப்புப் பாடல்கள் அதிகமாக வரும்போது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். – ஓ – சமுகத்தில் பேசுகிறபோது ஆங்கிலம் கலந்து பேசுகிறார்கள் போலும் என்று நீங்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
• வேர்ட்ஸ்வர்த், கவிதையை ஸ்பாண்டேனியஸ் ஓவர்ஃப்ளோ ஆஃப் எமோஷன்ஸ் என்றுக் கூறினார். கவிதைக்கு உங்களுடைய டெஃபனிஷன் என்ன?(சிரிக்கிறார்) புதுமைப்பித்தன் சொன்னது மாதிரி தத்துவத்துக்குக் சிக்காத கடவுள் தான் கவிதை. இது எந்த விதமான வட்டத்துக்கும், கோட்பாட்டுக்கும் ஆட்படாது. கவிதை என்பது அடிப்படையில் வந்து ஒரு அழகான உணர்ச்சி. அந்த அழகான உணர்ச்சி ஒவ்வொரு கவிஞருக்குள்ளும் புகுந்து மாறு வேஷம் போட்டு வெளவைருகிறது. அவ்வளவுதான். ஒரு நல்ல உணர்ச்கசி, எந்த உணர்ச்சியாக இருந்தாலும், நல்ல உணர்ச்கசிதான் அது. சோகமோ, வீரமோ, காமமோ, காதலோ, எந்த உணர்ச்சியாக இருந்த போதிலும் கூட அது நல்ல உணர்ச்சி. அந்த உணர்ச்சிக்கு, வார்த்தைகளால் வடிவமைப்பதுதான் கவிதை. எனக்கு தெரிந்து கவிதைக்கு இலக்கணம் வரையறுக்கப்படக்கூடாது. கவிதைக்கு இலக்கணமே இல்லை என்கிற போது, கவிதை என்பதற்கு என்ன இலக்கணம் என்று கேட்பது இன்னும் பிற்போக்காக அமையும். எனவே கவிதை என்பது காலந்தோறும் மாறிக் கொண்டே வருகிற விஷயம். உதாரணமாக, முதலில் உயிர் என்பது என்ன? என்பதற்கு விடைக் கண்டுபிடிக்கிற போது, கவிதை என்பது என்ன? என்பதற்கும் விடை கண்டு பிடித்துவிட முடியும்.
• நீங்கள் நிறையத் திரைப்படப் பாடல்கள் இயற்றிக் கொண்டு வருகிறீர்கள். இதைத் தவிர ஒரு காவியம் மாதிரி ஏதாவது ஒன்று பண்ணணும்னு…அதாவது கவிராஜன் கதை என்றுத் தமிழில் ஒரு முயற்சி. மகாகவி பாரதியாருடைய வரலாற்றை புதுக்கவிதையிலேயே படைத்துக் காட்டிய முயற்சி. அது பாரதியாருடைய நூற்றாண்டில் அதைச் செய்யக் கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதன் பிறகு சிகரங்களை நோக்கி என்ற ஃப்யஐ வெர்ஸ் என்றுச் சொல்லலாம் – அதை ஒரு குறுங்காவியம் என்றுச் சொல்லலாம். தண்ணீர்த் தேசம் ஒரு வித்தியாசமான படைப்பாக நீங்களே சொல்கிறீர்கள். இப்போது இதுவரைக்கும் நான் செய்ததெல்லாம் ஒரு பெரிய படைப்பை நோக்கிய பயணத்திற்க்காகப் பயிற்சிகள் என்று நினைக்கிறேன். இதுவரைக்கும் 30 நூல்கள் எழுதியிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.
• பெருசா ஏதாவது பண்ணணும்னு இருக்கா?இருக்கு… உதாரணமாக பாரதியார் பாஞ்சாலி சபதத்துல வந்து பாஞ்சாலி சபதம் எடுப்பதோடு நிறுத்தியிருந்தார். அவர் விட்ட இடத்திலிருந்துத் தொட்டுத் தொடங்கி பாஞ்சாலி தன் கூந்தலை முடிக்கும் வரையிலான அந்த மிச்சப் பகுதியை தொடர்ந்து முடிக்க வேண்டும் என்ற லட்சியம் எனக்கு இருக்கு. படைப்புல இது லட்சியங்களுள் ஒன்று. அவள் கூந்தலை முடிந்தவுடன் என் லட்சியம் முடிந்துபோகக் கூடாது. முடிந்துவிட்டால் லட்சியமே ஆகாது. இன்னும் காலம் எனக்கு கட்டளையிட இன்னும் புதிய பணிகள் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. சில விஷயங்கள் நெஞ்சில் இருக்கிறது. அதை இப்போது உங்களடைம் சொல்ல முடியாது. சில ஆண்டுகள் கழித்து நீங்களே வருகிற போது நானே கூப்பிட்டுச் சொல்லுவேன்.
• ஏன் திரைப்படப் பாடல்களில் பெண் கவிஞர்கள் அதிகமாக இல்லை?ம்ம்… ஆமாம். அதிகமாக இல்லை. அதற்குக் காரணம் வந்து தமிழில் பெண் கவிஞர்களே குறைவு. சங்க இலக்கியத்திற்குப் பிறகு பெரிதாக பெண் கவிஞர்களனை; பட்டியல் இன்றைக்கு இல்லை. அப்புறம், இன்றைக்கு பொதுவாக நம்முடைய உணர்ச்சி என்னவென்று கேட்டால் மூடி வைக்கப்பட்ட உணர்ச்கசி தான் நம்முடைய உணர்ச்சி. முழுக்க உணர்த்தப்படாத உணர்ச்சிகள். திரைப்படப் பாட்டென்பது உணர்ச்சிகளை வெளபை;படையாக சொல்லக்கூடிய துறை. உணர்ச்சிகளை வெளபை;படையாக சொல்வதற்கு பெண்கள் கூச்சப்படலாம். அல்லது திரைப்படப்பாடல் என்பது இலக்கியத்தை விட முரண்பட்டது என்ற கருத்து அவர்களுக்கு இருக்கலாம். திரைப்படத்திற்கு பாடல் எழுதக்கூடிய பெண் கவிஞர்கள் சிலர் இன்னும் இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எழுதக்கூடியவர்கள், ஆற்றல் கொண்டவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் திரைப்படப்பாடல் என்பது இலக்கியத்தை விட முரண்பட்டது. இலக்கியத்தின் உயரத்திற்குத் திரைப்படப்பாடல்கள் இல்லை என்ற கருத்தில் அவர்கள் திரைத்துறையைத் தள்ளi வைத்திருக்கலாம் என்றுதான் நினைக்கிறேன். சிறு கதைகளலை; அது சாத்தியமாகிறது. நம்மிடம் ஒரு மரபு இருக்கிறது. நம் தமிழ்ப் பெண் கவிஞர்கள் இன்னும், தமிழின் மரபுத் தொடர்ச்சியின் சங்கிலிகளாகவே இன்னும் இருக்கிறார்கள். சிறுகதை என்ற வடிவத்தைக் கையில் எடுத்துக் கொண்டவர்கள் நம்முடைய தமிழ் மரபை உடைத்து வெளiயே வந்திருக்கிறார்கள். நம்முடைய பெண் கவிஞர்கள் இன்னும் உடைத்து வெளiயே வருவதற்கு தயாராக இல்லை.
• பல திரைப்கபடங்களுக்கு பாடல்கள் எழுதுகிறீர்கள். பல பத்திக்கைகளலை; கவிதை தொகுப்பு எழுதுகிறீர்கள். உங்களுக்கு எது அதிக மனநிறைவை தருகிறது?எல்லாப்பொழுதிலும் நிறைவு தருவது கவிதை. அவ்வப்போது நிறைவு தருவது பாட்டு. கவிதை என்கிற உணர்ச்சி வந்து என்னை உந்துவிக்கின்ற உணர்ச்கசி மட்டுமே படைப்பு, கவிதையாகும். என்னை எது பாதிக்கிறதோ, என்னை எது எழுதத்தூண்டுகிறதோ, எது நான் உற்ற உணர்ச்சியோ, அல்லது உணர்ந்த உணர்ச்சியோ, அது மட்டுமே கவிதையாக ஆகும். பாடலில் அப்படி அல்ல. யாரோ ஒரு பாத்திரம் அடைந்த உணர்ச்சிகளை, ஒரு போலிமை எனக்குள்ளே புகுந்து எனக்குள் இருக்கும் உண்மையைக் போர்த்துக்கொண்டு, அது பாடலாக வெளiயே வருகிறது. பல நேரங்களலை; அது என் உணர்ச்கசியாக இல்லாமல் கூட இருக்கலாம். ஒரு குடிகாரன் பாட்டு பாடுகிறான். நான் எழுதுகிறேன். அவன் குடியை இவன் நியாயப்படுத்தி பாட்டு எழுத வேண்டிய கட்டாயத்தில் இவன் இருக்கிறான். அது பாத்திரத்தினுடைய தன்மை. அது எனக்கு உடன்பாடில்லாத கருத்கதாக இருக்கலாம். அது பாத்திரத்கதுடைய தன்மை. இப்போ, சீதையை இராவணன் சிறை எடுத்துக்கொண்டு போனது கம்பனுக்கு உடன்பாடாக இருக்க முடியாது. ஆனால், சீதையை இராவணன் எடுத்து சென்றான் என்று எழுதாவிட்டால் அவன் காவியப்பிழை செய்தவனாகிறான். அந்த மாதிரி எனக்கு பிடிக்காத உணர்ச்சிகளை கூட பாத்திரம் கருதி நான் சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். எனவே கவிதை என்பது எனக்கு எப்போதும் நிறைவை தருகிறது. பாட்டு என்பது எப்போது என்னுடைய உணர்ச்சியை பிரதிபலிக்கிறதோ அப்போதெல்லாம் எனக்கு நிறைவு தருகிறது.
• ஏன் நீங்கள் சிறு பத்திரிக்கைகளுக்கு எழுதுவதில்லை? ஆனந்த விகடன், குங்குமம், குமுதம் போன்ற பத்திரிக்கைகளுக்கு எழுதுகிறீர்கள். ஆனால், ஏன் கணையாழி மாதிரி பத்திரிக்கைகளுக்கு எழுதுவதில்லை?சிறு பத்திரிக்கைகாரர்கள் என்னை அழைத்தக்கேட்கடால், அவர்கள் கேட்கிற செய்திகள் எனக்கு உடன்பாடாக இருந்தால், எழுதுவேன்.
• இன்றைய திரைப்பாடல்களனை; பொதுவான போக்கு உங்களுக்கு நிறைவு தருகிறதா? இல்லை. முழுக்க நிறைவு தர முடியாது. ஒரு கவிஞன் ஆசைப்படுதெல்லாம் நல்ல கதைக்களுக்கு பாட்டெழுதுவதைத்தான். நல்ல கதை இருந்தால்தான் ஒரு கவிஞன் தன்னுடைய முழுமையான கருத்துக்களை இறக்கி வைக்க முடியும். இன்றைக்கு தமிழ்த்திரைப்படம் தொழில் நுட்பமயமானதாகிவிட்டது. கதை இரண்டாம் பட்சமாகவும், தொழில்நுட்பம் முதல் பட்சமாகவும் ஆகிவிட்ட ஒரு காலக்கட்டத்தில் ஒரு கவிஞனாக இருக்கிறவன் தன் முகத்தையும் முகவரியையும் காப்பாற்றிக் கொள்வதே ரொம்ப சிரமம்.
• இன்றைய திரைப்பலப்பாடல்களலை; நிறைய இரைச்ககசல் இருக்கின்றது என்ற ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அந்த இரைச்சலில் பாடலில் சொற்களே காயப்பட்டுகின்றன என்ற கருத்தும் நிலவுகிறது. அதை பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?சில பாடல்களலை; நீங்கள் சொல்கிற குற்றச்சாட்டு இப்போதும் நிலவுகிறது. அதை மெல்ல மெல்ல போராடிமாட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அதை எப்படி அதை புரிந்து கொள்கள வேண்டும் என்று சொல்லுகிறேன் – உலகமே இரைச்சல்மயமாகி வருகிறது. நவீன வாகனங்களனை; சத்தம், நவீன உலகத்தின் போர்கக்குரல், இயந்திரங்களனை; சத்தம், வாழ்க்கையின் இரைச்சல். இந்த இரைச்சலுக்கு மத்தியில் மனிதன் வாழத்து கொண்டிருக்கிறபோது இரைச்சலை இரைச்சலாகவே வெளபை;படுத்தி தருகிறான். மேல்நாட்டு இசையினுடைய பாதிப்பு உலகம் முழுக்க எல்லா திசையிலும் விழுந்திருக்கிறது. மேல்நாட்டு இசையின் பாதிப்பு வந்து தமிழ் இசையிலும் விழுந்திருக்கின்றபோது அந்த மேல்நாட்டு இசைக்கருவிகள், மேல்நாட்டு பாணி, மேல்நாட்டு இரைச்சல், மேல்நாட்டு பீட் எல்லாமே வந்திருக்கிறது. ஆனாலும் கூட நிலைபெறுகிற பாடல்கள் இரைச்சல் பாடல்கள் அல்ல, இனிமையான பாடல்கள், நல்ல கருத்துக்கள் கொண்ட பாடல்கள், கற்பனை வளம் கொண்ட பாடல்கள், உணர்ச்சியை உன்மையாகவே அழகு செய்து காட்டுகின்ற பாடல்கள் நிலைத்திருக்கின்றன. நிலைபெறும், ஆனால் இளைஞர்கள் தாளத்திற்கு ஆடுவதற்கு தயாராக உள்ளனர். ஒரு காலத்தில் செவிகளுக்கு மட்டுமே இருந்தது இசை. இப்போது உடம்புக்கு அகியிருக்கிறது. உடம்பை இருக்கின்றபோது இரைச்சல் வந்தே தீரும். காலப்போக்கில் இந்த ரசனை மாறுகிற போது மீண்டும் மெலடி வரும். ஆனால் மெலடி மூழுககி மூழுககி மீண்டும் மீண்டும் தலைக்காட்டிக்கொண்டே இருக்கும்.
• சமீபத்தில் நீங்கள் எழுதின திரைப்படப்பாடல்களலை; இசைமைப்பாளர்களோ, இயக்குநர்களோ, பாடகர்களோ, நடிகர்களோ, ரசித்த சம்பவம் பற்றி ஏதாவது கூறமுடியுமா? தினந்தோறும் நிகழ்கிற சம்பவங்கள் இது. தினந்தோறும் நேசிப்பவர்கள், தினந்தோறும் விமர்சனம் வரும். இது ஒரு புது செய்தியாக தெரியவில்லை. அப்படி பார்த்தால் எனக்கு வந்து தஞ்சாவுரு மண்ணெடுத்து பாட்டைச் சொல்லலாம். எல்லோராலும் நேசிக்கப்ட்ட ஒரு பாட்டு. அப்புறம் வந்து, வெண்ணிலவே, வெண்ணிலவே சொல்லலாம் – மின்சார கனவு-ல வருகிற பாட்டு – ரட்சகன்-ல சோனியா, சோனியா – ஒரு பாட்டுக்குள்ளேயே ஒரு பட்டிமன்றம் நடத்திய பாட்டு. இப்படி அண்மைக்கால பாட்டு, ஆனால் இவையெல்லாவற்றினையும் விட பெரிதாக எதிர்பார்பது ஜீன்ஸ். ஜீன்ஸ பாடல்கள் ஒரு புதிய வாசலைதிறந்து கொடுக்கும் என்று கருதுகிறேன். பார்ப்போம் அப்புறம் மக்கள் கையில்.
• உங்க குடும்பத்தில், உங்கள் மனைவி தவிர, உங்கள் குழ்ந்தைகளுக்கு கவிதையில் ஆர்வம் உண்டா?என் குடும்பத்தில் மூன்று பேருக்குமே கவிதையிலும் கலை இலக்கியத்கதிலும் ஈடுபாடு உள்ளவர்கள். மூன்றுபேருமே படைப்பாளகைள் தான். அனால் அவர்களுக்கு நான் முழு சுதந்திரம் கொடுத்திருக்கிறேன். எந்தத்துறையை வேண்டுமானாலும், தேர்ந்தெடுகத்துக் கொள்ளலாம்.
• உங்கள் மகன் கவிதை எழுதுவாரா?இருவருமே எழுதுவார்கள்.
• கவிதை ஏதாவது பிரசுரமாகியிருக்கிறதா?ஆகியிருக்கிறது. இரண்டாவது பையன் கபிலன் தமிழ்க்கவிதைகளலை; மிக வல்லவனாய் இருக்கிறான். மூத்த பையன் கார்க்கி ஆங்கிலக் கவிதையில் மிக வல்லவனாய் இருக்கிறான்.
• ஏன் கார்க்கி என்று பெயர் வைத்கதீர்கள்? ரஷ்ய எழுத்தாளருடைய பெயர் இல்லையா இது?என் கலைஞர் தன்னுடைய மகனுக்கு ஸடாலின் என்று பெயர் வைக்கவில்லையா? (சிரிக்கிறார்)
• அதற்கு இல்லை, உங்களுக்கு அந்த எழுத்தாளருடைய பாதிப்பு ஏதாவது இருந்ததா? அதற்காக கேட்டேன்.இருக்கலாம். இருக்கக்கூடாதா? இருக்குமல்லவா.
• கவிதைத்தவிர உங்களுக்கு வேறு ஏதாவது நாட்டம் உண்டா?
எனக்கு மிகவும் பிடித்தது வானத்தை பார்த்துக்கொண்டிருப்பது. என் வாழ்க்கை முழுக்க நான் சலிக்காமல் செய்து கொண்கடிருக்கக் கூடிய ஒரே விஷயம் வானத்தையே பார்த்துக்கொண்டிருப்பது தான்.• சென்னையில் வானத்தை எங்கிருந்து பார்த்துக்கொண்டிருப்பீர்கள்? மொட்டைமாடியிலிருந்து.
• இப்ப கடைசி கேள்வி. இந்த பேட்டி எல்லா நாடுகளiலிருந்தும் படிப்பார்கள். பலாயிரம் பேர் எங்களனை; இந்டோலின்கை படித்திருக்கிறார்கள். பல்வேறு நாடுகளலை; தமிழர்கள் அவங்களுக்கெல்லாம் நீங்க என்ன சொல்ல விரும்புகிறீர்கள். எல்லோருக்கும் தமிழ் படிக்கவேண்டும் என்ற ஆர்வம் இருக்கின்றது. அவர்களுக்கெல்லாம் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?அவர்கள் அத்தனை பேருக்கும் முதலில் என்னுடைய வாழ்த்துக்களை சொல்ல விரும்புகின்றேன். அவர்கள் பொருள் வளத்தோடும், பல்லாண்டு வாழ வேண்டும் என்று நான் வாழத்துகிறேன். இரண்டாவதாக நான் சொல்ல விரும்புவது, எந்த நாட்டில் இருந்தாலும் எந்த மொழி உங்கள் வயிற்றுக்கு சோறிட்டாலும் உங்கள் உணர்றவுக்கும் உயிருக்கும் ஊட்டமளபை;பது உங்கள் தாய்மொழிதான் என்பதை மறந்துவிடாதீர்கள் என்று அவர்களை நான் அன்போடும் பணிவோடும் வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன். இந்த இணையத்தில் இருக்கிற பல்லாயிரக்கணக்கான பேர் என்று சொன்னீர்கள் அல்லவா. இந்தப் பல்லாயிரக்கணக்கான பேரும் நாளைய தலைமுறைக்குத் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழை வாழையடி வாழையாக சொல்லித்தர வேண்டும் என்பதை அன்போடுக் கேட்டுககொள்கிறேன். இந்தப் பல்லாயிரம் பேரோடு முடிந்துவிடுவதல்ல தமிழ்…..
• இது சாத்தியம் என்று நினைக்கிறீர்களா…? உதாரணத்துக்கு தென் ஆப்பிரிக்காவில் இருக்கும் தமிழர் ஒருவர்….எது சாத்தியமில்லையோ அதை சாத்தியப்படுத்துவதுதான் சாதனை. சாத்தியமாக இருந்தால் நான் ஏன் இதை சொல்லிக்கொண்டிருக்கிறேன். சாத்தியமில்லாத விஷயங்களை சாதித்துக் காட்டுவதுதான் சாதனை. மேல் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியுமா? அந்தந்த நாட்டு மொழியைக் கற்றுக் கொள்கிறவர்கள் தமிழர்கள். வாழ்க்கைக்கு அது போதுமானதாக இருக்கிறது. பண்பாட்டுக்கு அது போதுமானதாக இல்லை. மேல் நாடுகளலை; குடியிருக்கக்கூடிய தமிழர்களலை; இலங்கைத் தமிழர்கள் இருக்கிறார்கள், தமிழ் நாட்டுத் தமிழர்களும் இருக்கிறார்கள். இவர்கள் வீட்டில் தமிழ்ப் பேசுகிறவர்கள் கணவனும் மனைவியும். குழந்தைகள் தமிழ் பேசுவதில்லை. குழந்தைகளுக்குத் தமிழ்ச் சொல்லிக் கொடுக்காவிட்டால் அடுத்தத் தலைமுறையில் தமிழ் என்று ஒன்று இல்லாமல் போய்விடும். எல்லா நாடுகளiலும் அன்னியக் குடியேற்றத்தை ஆதரிக்கக்கூடிய முறை இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு இருக்கும் என்றுத் தெரியாது. திடிரென்று எந்த நாட்டுக் குடிமகனையும் எங்கள் நாட்டுக்குள் ஏற்றுக் கொள்வதில்லை. இருக்கிறவர்கள் மட்டும்தான் எங்கள் நாட்டுக் குடிமக்கள் என்று ஒரு சட்டம் ஏற்றப்பட்டுவிட்டால் இரண்டாவதுத் தலைமுறையிலேயே தமிழ் அங்கே காணாமல் போய்விடும். எனவே தொடர்ச்சியாக, வாழையடி வாழையாக தமிழைக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது தமிழர்கள் ஒரு முக்கியமான இடத்தில் கூடித் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றுக் கேட்டுக்கொள்கிறேன்.
மொழியை எழுதுவதற்கும் பேசுவதற்கும் கற்றுக்கொடுங்கள். ஒலிகளை, தமிழ் ஒலிகளை அந்தக் குழந்தைகளுக்கு பயிற்றுவித்துவிடுங்கள் என்று நான் அன்போடுக் கேட்டுக்கொள்கிறேன்.
|